நாம் என்பது நானும்தான் !
இயல்புகளை தினமும் விற்பனை செய்யும் வினோத மனித சண்டை நம் ஒவ்வொருவருக்குள்ளும் . தனி மனித முன்னேற்றம் சுய நிதி நிறுவனகளில் சாத்தியமில்லாத ஒன்று என்று தோனுபவர்களுக்கு பொறுமையின் அளவு குறைவுதான் என்று தோனுகிறது . தனி மனித முன்னேற்றம் வெறும் பணம் தீர்மாணிபதல்ல. இழப்புகளையும் , தியாகங்களையும் நினைத்து பார்த்தால் வெறும் பணத்தின் மதிப்பு புறகனிக்கதக்கதாகும்.
ஈகோ என்பது இங்கு பலருக்குபொதுவான ஒன்று. சிலருக்கு அது ஒரு மெல்லிய படலம். .பலருக்கு அது ஆல மரம் .... சிலரின் முன்னேற்றம் பலரின் கோபங்கள் ! பலரின் கோபங்கள் சிலரின் தோல்விகள் ! . ஒவ்வொருவரும் மற்றவரது தோல்விகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலை மட்டுமே உண்மை.
"Survival of the fittest” என்கின்ற உலக நியதி அவ்வப்போது பொய்பதை நாம் கண் கூடாக பார்க்கிறோம் . எதுவும் நிலை இல்லாத இந்த யுகத்தில் பதவியும் , ஆளுமையும் எம்மாத்திரம் ! இன்று சுகங்களையும் , வெற்றிகளையும் அனுபவிக்கும் போது, அவைகள் நாளையும் தொடருமா என்பதை நான் சிந்திக்க மறக்கும் போது பிரச்சனைகளும் சங்கடங்களும் முளைகின்றன . சுகவாசிகளாய் இருக்கும் போது மறுக்கின்ற, என்று கொள்ள முடியாத சில நியாமான விஷயங்கள் நமக்கு எதிரியாய் வளர்ந்து நிற்கும் .
சக மனிதர்களை கையாளும் திறன் , அதற்கான பக்குவத்தின் பற்றாக்குறை , சில உறவுகளுக்கிடையே விரிசல் வர காரணமாய் இருக்கின்றது. தவிர்க்க வேண்டிய சந்தர்பங்களில் வருகின்ற நியாயமற்ற கோபங்கள் ! துரோகம் கண்ட பின்பும் வராத கோபங்கள் பயனில்லாமல் போய் விடுவது வாடிக்கை . நமது வார்த்தை பிரயோகங்கள் மற்றும் கோப உணர்ச்சியில் எல்லை மற்றவரது மனதில் காயத்தை ஏற்படுத்தும் போது உண்டாகும் இழப்பை நாம் நினைத்து பார்ப்பது இல்லை .
நிதானம் பிரதானம் ! - ஆம் நிதானத்தின் பற்றாகுறை நமக்கு பல நெருக்கடிகளை தருவதை பல சந்தர்பங்களில் நம்மால் உணர முடிகின்றது . சில சந்தர்பங்களை தவிர்த்திருந்தால் பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம் என்பதை நம்மில் பலர் நிகழ் காலத்தில் உணர முடிவது இல்லை .
நமது எதிரிகளை எதிரிகளாகவே பார்கின்ற அளவீடு தொடர் பிரச்சனைகளுக்கும் , மன சஞ்சலங்களுக்கும் காரணமாகின்றன . ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு எதிராக நடந்து கொண்டவரை எப்போதும் எதிரிகளாய் பாவித்து வெறுப்பை உமிழும் கொடிய மிருகம் நம்முள் ஒளிந்திருப்பது உண்மைதான். தன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் , தனது நியாயத்தின் நிலை மற்றவருக்கு தெரிய வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு தற்காப்பு நிலையில் ஏங்கி கொண்டுதான் இருக்கின்றோம்.
"Recognition "- என்ற ஒன்றுக்காக ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப , திறமைக்கேற்ப உழைப்பை கொடுக்கின்றோம் .சிலருக்கு அது விரைவில் கிடைத்து விடுகிறது . பலருக்கு அது தோல்விகளையும் , வெறுப்புகளையும் தந்து விடுகிறது . எத்தனை கோபங்கள் , வெறுப்புகள் இருந்தும் மீண்டும் அந்த" recognition " என்ற ஒன்றை நம் மணம் எதிர் பார்ப்பது வாடிக்கை . செய்கின்ற வேளைகளில் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் உண்மையில் இங்கு அர்த்தம் இல்லை. எதிர்பார்ப்பு எல்லா மட்டத்திலும் இருக்கின்றது. உழைப்பவர்களின் எதிர்பார்ப்பு ஊதியத்திலும் ! அங்கீகாரதிலும். முதலாளிகளின் எதிர்பார்ப்பு வெற்றிகளிலும் , வளர்ச்சியிலும்!
கடமையை செய் ! பலனை எதிர் பார்காதே என்பது பழ மொழி . இன்றைய சூழலில் கடமையை கடைசி வரை செய்து பலனின்றி போனவர்கள் தோல்வியடைந்தோர் பட்டியலில் சேர்த்து வெறும் வெறுமையை பரிசளிக்கும் இந்த உலகம் .
காந்தியும் போராடுவது கடமை என நினைத்து போராடியதால்தான் சுதந்திரம் என்ற பலனை அடைய முடிகின்றது . ஆக கடமயை செய்வோம் .. பலனை எதிர் பாப்போம் . பலன் என்ற ஒன்று கடமையை செய்யும் ஒவ்வொர்வருக்கும் கிடைத்தாக வேண்டிய ஒன்று . இயற்கை செய்யும் இருள் என்னும் கடமையின் பலன் வெளிச்சமெனும் பகல் ! நாம் எல்லோரும் வெளிச்சத்திற்குள் வர வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைக்கின்றோம். ஆனால் அதற்கான உழைப்பை செலவிட தயங்குகின்றோம் மாறாக உழைப்பவர்களை விமர்சனம் செய்து அணி அமைத்து முடக்க நினைகின்றோம் . நாம் எல்லோரும் ஓர் அணி . எல்லோரும் ஒரு குடைக்குள் என்ற மன நிலை வரும்போது பாகுபாடும் , பொறாமைகளும் அங்கே இருப்பதுதில்லை.
" யானைக்கும் அடி சறுக்கும் " என்ற அக்றிணை பழமொழி மாந்தருக்கும் ஏற்பாக அமைவது உண்மை. நாம் சக மனிதர்களின் வீழ்ச்சி நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள். உச்சாணி கொம்பில் இருப்பவர் அதள பாதாளத்தில் விழுவதும் , சாதாரணமாணவர்கள் அசாதாரமானவர்களாக ஆவதும் இயற்கையின் நியதிகளில் ஒன்று. விழிகள் ஊனமாகும் பொது வெளிச்சம் மறுக்க படுகின்றது .
தெளிவான சிந்தனை , வீழ்ச்சிகளை பற்றிய விழிப்பு ஏதுமின்றி வாழ்கையை தொலைத்தவர்களை வரலாற்றில் தேட வேண்டாம். நம் அருகில் அமர்ந்திருபவர்கள் .. ஏன் நாமாக கூட இருக்கலாம் . உண்மையில் தினமும் உறக்கம் ... விடியல் என்ற இரண்டும் இல்லாவிடில் இந்த உலகம் என்றோ மடிந்திருக்கும் . நான் கடவுள் நம்பிக்கை கொள்ளவில்லை மாறாக இயற்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். நொடிகள் கடக்காவிடில் துன்பங்களும், இன்பங்ககளும் கடக்காது. வலியின் மருந்து காலத்தின் ஓட்டம். காலத்தின் போக்கில் நாமும் ஓடுவோம் . நம் வீழ்ச்சிகளையும் தோல்விகளையும் மறந்து ...
அன்புடன் இரா. திருநீலகண்டன்
really nice
ReplyDelete