Friday, December 3, 2010

LOVE- In my Perceptive என் பார்வையில் காதல் !


என் பார்வையில் காதல் !
மலரினும் மெல்லியது காதல்.மயிலிறகின் வருடல் காதல். ... இந்த காதல் பல தருணங்களில் கண்ணீரையும் , குருதியையும் தருவதுண்டு ..இருந்தும் காதல் தோற்பதில்லை . இளமையின் வேகம் மற்றும் ஈர்ப்பின் காரணமாக தன இருதயத்தை தொலைத்தவர்கள் இளம் காதலர்கள். ஒரு நிமிட பார்வை கூட காதலை சொல்லிவிடும் . அனைவரும் இது உலக பொது மறை ! திருக்குறள் போல !.இந்த காதல் பந்தையத்தில் வென்றவர்களை விட தோற்பவர்கள் ஏராளம் . காரணங்களும் ஏராளம் .
காலம் வேண்டுமானாலும் கடந்து போகும் ..இந்த காதல் காதல் என்றும் கடந்து போவதில்லை .. தியாகங்களும் , இழப்புகளும் காதலின் வழியை உணர்த்திக்கொண்டு இருக்கும் உயிர் உள்ளவரை. காதலுக்கு எதிரிகள் இல்லை. எதிர்பவர்கள் உண்டு.. பெற்றவர்கள் உண்மையில் காதலை எதிர்பதில்லை .....காதலிப்பவர்களை எதிர்கின்றனர் . அவர்களும் உயரிய காதலில் திளைத்தவர்கள்தான். அவர்களின் காதல் , பாசமெனும் பரிமாணத்தில் ! நம்மீது ! .
காதல் என்ற விடுகதைக்கு பதில் தெரிந்தவர்கள் , அதில் வெற்றி பெறுகிறார்கள் . மாறாக விடுகதையை விளங்காமல் பதில் தெரியாமல் இருப்பவர்கள் தோற்கிறார்கள் . தாய் , தந்தை என்ற உறவுகளை அடுத்து மூன்றாவது உறவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிக்கலான விஷயம் . தேர்ந்தெடுக்கப்படும் உறவு நிரந்தரமான அன்பை கொடுக்க வேண்டும் . நீடித்து இருக்க வேண்டும், பிரச்சனைகளால் அது உடைய கூடாது,
அழுகையை துடைக்கும் விரல்களாய் , ஆரத்தழுவும் கைகளால் , அன்பை மறவா நெஞ்சமாய் இருக்க வேண்டும் என்பதை நம்மில் சிலர் காதல் வந்த தருணத்தில் நினைப்பது இல்லை. பொதுவாக பெண்கள் நிலைப்பாடு இதில் வருத்ததிற்குரியது . " காதல் என்ற ஒன்றுக்காக அனைத்தையும் மறந்து , துறந்து பின் காயம்பட்டு நொடிந்து வருந்தும் நிலை இங்கு சாதாரணம். இது துணையை தேர்ந்தெடுப்பதில் உள்ள பக்குவமின்மையை காட்டுகிறது.
காதல் " பருவம் சார்ந்தது . பருவத்திற்கு முன் காதல் பலரின் வாழ்கையை திருப்பி போட்டு இருக்கிறது . எனது இல்லம் அருகே இருந்த 13 வயது சிறுமிக்கு காதல் ! நல்ல வசதியான பெண், அவள் உடுத்தும் ஆடைகள் அவளின் செல்வ செழிப்பை சொல்லும். தவறான தூண்டுதலின் விளைவாகவும் , காதலின் அர்த்தம் புரியாமலும் , காதலித்து மணந்தாள் ஒருவனை. அவனுக்கு ஒரு 27 வயதிருக்கும் . வீட்டை விட்டு வெளியேறிய அவளுக்கு தெரியவில்லை எதிர்காலத்தின் ஏமாற்றம் . வருடம் இரண்டில் அவளது வாழ்க்கை பழுத்து போனது . கிழிந்த ஆடைகளோடு கையில் குழந்தைகளோடு தினக்கூலி வேலை செய்தாள். சில தவறான முடிவுகள் நம்மையும் , நம் வாழ்க்கையும் சிதைத்துவிடும் .
மேற்சொன்ன நிகழ்வு வெறும் கற்பனை அல்ல. நம் வீடு புறங்களில் தற்போது சர்வ சாதாரணம். உடைகளை தேர்ந்தெடுப்பதில் இருக்கின்ற கவனம்கூட உறவுகளை தேர்ந்தெடுப்பதில் இருபதில்லை . இது ஒருபுறம் இருக்க நல்ல துணியை தேர்ந்தெடுத்தும் வருகின்ற எதிர்ப்புகளை கையாளும் திறன் நம்மில் பலருக்கு இருப்பதில்லை . திடீர் அதிர்வுகளை பெற்றவர்களால் எப்படி தாங்கி கொள்ள முடியும். அப்படி நினைப்பது அடி முட்டாள்தனமும்கூட. எறும்பு ஊற கல்லும் தேயும் . நம் பெற்றோர் மனம் கல் அல்லவே . மனித மனம் என்றும் உண்மையை எதிர்பார்க்கும் . எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் சாமளித்துவிடலாம் என நினைக்கும் சமயத்தில் , எப்படியாவது தெளிவு படுத்தி விடலாம் என நினைப்பதை மறந்து விடும் போதுதான் வாழ்க்கை மிகவும் சிக்கலாகிவிடும் .
இவை எல்லாமும் நமக்கு தெரியும் ! நாம்தான் மேதாவிகளாயிற்றே! காதலின் பொது செய்யும் தவறுகளும் தெரியும். ஆனால் அதை ஏற்று கொள்ள முடிவதில்லை. காரணம் பிடிவாதம் ! நம் வாழ்க்கை என்ற சிறு திமிர் ! உண்மையில் இது நம் வாழ்க்கைதான் . நாம் வாழ போகும் வாழ்க்கைதான் ! ஆனால் சந்தோசமானதா? இல்லை வருதமானதா ? காலம்தான் விளக்கும் .காதலர்கள் தோற்கலாம் ! காதல் தோற்பதில்லை . உண்மைதான் . செய்த காதல் பொய், அர்த்தமற்றது என தெரிந்தால் மீண்டு வர முயல வேண்டும் . கண்ணீர் , நினைவுகள் என காலத்தை தொலைத்து வாழ்க்கை யை தொலைத்தவர்கள் உண்மையான காதலின் வழிகாட்டிகள் அல்ல ! விட்டில் பூச்சிகள் !
காதல் , அன்பு, பாசம் இவை ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல . இந்த பரந்த உலகில் அன்பை அள்ளி கொடுக்க மனிதர்கள் நிறையவே இருக்க, பழைய நினைவுகள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் ஊனமாகிவிடும்.
இது நமக்கான வாழ்க்கை ! நாம் வாழ வேண்டிய வாழ்க்கை என்ற தெம்போடு அன்பை தேட வேண்டும் . அதற்க்கு காதல் என்று அர்த்தம் பெயரிட்டால் கூட தப்பில்லை . முதல் காதல் ..முடிவான காதல் அல்லவே ! எண்ணி பாருங்கள் . இன்று வாழ்கையை சந்தோசமா வாழும் அனைவரும் அவர்களின் வாலிப வயதில் காதல் அரும்பி பின் மறைந்திருக்கும் .
அவர்களுக்கெல்லாம் காதல் ஓர் அனுபவம் . அந்த அனுபவம் பலருக்கு வாழ்க்கை முழுதும் சந்தோசத்தை கொடுத்திருக்கும் . சிலருக்கு சிக்கல் தந்து சிதைத்திருக்கும் . சில சமயங்களில் பழையதை மறந்தால் தான் வாழ்கையின் பயணத்தை தொடர முடியும் . தோற்ற காதலர்கள் ... வாழ்கையை தொலைத்தவர்கள் அல்ல ! அவர்களுக்கான வாழ்கை என்று காத்திருக்கும் . முற்று பெறாத அந்த வாழ்க்கை நல்ல துணை கிடைப்பதால் முற்று பெறும்.

.........................................................முற்றும் ....................

இரா. திருநீலகண்டன்

1 comment: