Wednesday, January 1, 2014

Tamil - Article - Poem

காட்டாற்று கலியின் வேகத்தில்

கன்னியரின்

வாழ்வில் ஏற்பட்ட

வருத்தத்தின் வலியை

 உணர்த்தும் விதமாக

கவிதை வரிகளில்

 ஒரு சிறு கதை ...........

 

பாவையவள் 

பருவம் வந்ததும் பாவமானாள்..

பதினாறு வயதினில் 

துள்ளி திரிந்த வண்ணத்து பூச்சியவள்

எண்ணியவைஎல்லாம்

ஏமாற்றமாய் மாற

 கன்னி பெண் அவளுக்கு

கல்யாணமாம் கல்யாணம்...

 

மாமன் மகன்தான் மாப்பிள்ளை

மயக்கும்

மன்மதனில்லை .....

மதுரை சூரனும் இல்லை

குணத்தில் சிறந்தவனில்லை

குடியில் உயர்ந்தவனில்லை

பழக சிறந்தவனில்லை..

பண்பில் சிறந்தவனில்லை..

 

இத்தனை இம்சைகள் கொண்ட

இருபதை கடந்து

இருபது வருடமான அவனுக்கு?

 மணம்  முடிக்க

 இசைந்தனர் இரு வீட்டோர்!

 

தேதி குறித்தும்

 வீதியில் வாழை மரமும்

வன்னதொரனமும் ....

என்ன நடக்கும் என்றறியாமல்

ஏக்கமாய் இருந்தவள்

இரவு தூக்கமிழந்து

காலை  வந்ததும்

சோலையில் பூத்த மலர்போல்

 மாலையோடு வந்தவள்

மாமன் மகனாம் 

மணமகன் அவனை

மனதில் ஒரு கணம் 

மகிழ்வாய் பார்த்தாள்...

மறு கணம்   மகிழ்ச்சிக்கு இடியாய்

வயதான மாமன்

மிடுக்காக வீற்றுருந்ந்தான்.....

மந்திரம்  ஓத          

தாலியை கட்ட தரமாய் மாறினாள்..

தாமரை  மலரவள் ..

 

இளையவள் அவளும்

இம்சைகளை தாண்டி இல்லறம் தன்னை

இனிதே நடத்தினாள்..

இதுவரை இல்லாத  

விதியின் விளையாடல்கள் தனது பராகிரமாதை காட்டியது..

விடியல்கள் தினம் வந்தும்

இவளுக்கு வர வில்லை

வருடம் வளர்த்தது

 வாரிசும் வந்தது

ஆசைக்கு ஒரு மகன்

அழகிற்கு ஒரு மகள் என்று

வாழ்ந்தவளின்  வாழ்கையில்

வந்தன இன்னல்கள்

கட்டிய கணவன் விவரம்  அறியாமல் 

விதியை உணராமல்

விபத்தில் வீழ்தணன்

புன்னைகை இழந்தவள்

வெள்ளுடை தரித்தாள்

கையில் சிறுகுழந்தை ...தவழும் மறு குழந்தை

என்ன செய்ய போகிறாள் இந்த இளம் விதவை.?

இட்சிகள் அற்றவளாய்  

இன்பத்தை இழந்தவளாய்

கண்ணீரே கணவனை வாழ்ந்தாள்

அண்டை அயலாரின் 

பார்வை கண்ணோட்டத்தில் 

விதவையவள் வினோத தாசியானாள்!

வேத புத்தகங்கள் உரைத்த

ஒழுங்க நெறி மறந்து

கயவன் ஒருவனால் களங்கம் அடைந்தாள்.....

பணம் வேண்டி நின்றவளை

மானம் கலைத்து  மோசம் செய்தான்     ..

 

சூழ்நிலையின் சதியா? இல்லை

சூழ்ச்சிகளின் வலையா?

கால நீரோட்டத்தின் தண்டனையா?

ஊன்றுகோல் இல்லை

உதவுவோர் இல்லை ...

ஆறுதல் தேடி இவள்

மறுகனவன் தேட வில்லை

மார்பிற்கு கீழே காலியாய்

வறண்டு  தவிக்கும்

வயிடிற்றுக்கு வகையாய் 

வைத்தனள் அவனை

அந்த கைம்பெண் சிலையாள்!

 

ஏன் ?

உழைத்து

ஊர் இகழாமல்

வாழ இயலாதா அந்த வஞ்சிக்கு

என கேட்போருகேல்லம்

பசி வந்தால்தான் பதில் விளங்கும் என்றாள் !

வயிற்று பசிக்காக தன உடையை களைந்தவள்

மானம் காக்க தன உயிரை களைந்திருகலாமே என

 என்னுவோர்கெல்லாம்  

திண்ணமாய் உரைத்தாள் பச்சை குழந்தைகளின் பரிதாபத்தை  ....

இவளின் இன்னலகளுக்கு இளஞ்செடிகள் பலியா?

எண்ணி பார்த்தாள் ஏற்றாள் இன்னொருவனை !

புரட்சி இதுதான் என

விதவை திருமணத்தை ஆதரிக்கும் சமூகம்

நடைமுறை வரும்போது கதவை  அடைப்பது முறையோ?

வெறும்

சதைகளோடு சரசம் கொள்ளும்

ஆண் வர்கத்தின்  அழிவிற்கு ஆண்டவன்

விதையை வித்திடுவது எந்நாளோ?

என ஏக்க வினாக்களை தாங்கியவலாய் வாழ்கையை தொடர்ந்தாள்........

No comments:

Post a Comment